உங்களை அடிக்கனும் போல இருந்துச்சசு  என்றார் ரஜினி 

நடிகர் செந்தாமரையை அவரது வீட்டில் சந்திக்க சென்றேன்.
உங்களை அடிக்கனும் போல இருந்துச்சசு  என்றார் ரஜினி 

நடிகர் செந்தாமரையை அவரது வீட்டில் சந்திக்க சென்றேன்.

புதியவர்கள் நுழைந்திருக்கும் இந்த திரை உலகத்தில் நீங்கள் எப்படி ஸ்டான்ட் பண்ணி நிற்கிறீர்கள்?

புதிய டைரக்டர்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி நடிக்கிறதுக்காக என்னை மாத்திக்கிறேன்.

பாக்யராஜ் ரஜினிகாந்த் போன்றவங்களோட நீங்க பிரதான காதாபத்திரத்தில் நடிக்கிறீங்க..இதுக்கு காரணம் உங்க திறமையா இல்ல உங்க மேல அவங்களுக்கு இருக்கிற அபிமான பிடிப்பா?

பாக்யராஜ் கதாபாத்திரத்தை தன் மனதில எப்படி உருவகப்படுத்தியிருக்கிறாரோ அந்த எல்லை வரைக்கும் கொண்டு வர்றதில உறுதியா இருப்பாரு. அவரு விருப்பத்தை நாம் நிறைவேத்துறப்போ 'ஓகே' ஆயிடறேன்.

ரஜினிகாந்தை எடுத்துக்கிட்டா பெரிய மனுஷன்னே சொல்லலாம். என்னுடைய இருபத்தஞ்சு வருஷ அனுபவத்துல நிறைய நடிகர்களோட நடிச்சிருக்கேன். ஆனாலும் எதிரில்நடிகிறவங்கள மனசு விட்டு கையோடு பாராட்டுற மனசு இவருக்கு உண்டு.

'மூன்று முகம்' படத்தில ஒரு கட்டத்தில் என் நடிப்பை பார்த்துட்டு ஷாட் முடிஞ்சதும் ரஜினிகாந்த், ' அண்ணே, அந்த ஷாட்ல உங்களை அடிகாணும் போல இருந்துச்சசு. அந்த அளவுக்கு வெறி வருகிற மாதிரி நடிச்சிருந்நீங்க'ன்னு சொன்னாரு.

தாராள மனசு இருந்ததாலதான் அப்படி சொன்னாரு. அவர் நினைச்சிருந்தா எனக்கு முக்கியத்துவம் இல்லாமல் காட்சியை எடுத்திருக்கவும் அவரால முடியும்.  என்னுடைய நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அவங்களோட நட்பும் ஒரு காரணம்.

எம்.ஜி.ஆரோட, சிவாஜியோட சேர்ந்து நடிச்சிருக்கீங்க. அவங்க ரெண்டு பேர்கிட்ட இருந்து என்ன மாதிரியான அனுபவங்களை கத்துக்கிட்டிங்க?

எம்ஜிஆரோட நாடங்களிலும் படங்களிலும் சேர்ந்து நடிச்ச பொழுது நிறைய கலை நுணுக்கங்களை புரிஞ்சுக்குற பக்குவம் ஏற்பட்டுச்சு. சிவாஜியோட சேர்ந்து நடிச்சதன் மூலமா  வேலைக்கு நேரத்துக்கு போறது, கேரக்டரை புரிஞ்சு நடிக்கிறது இதுல எல்லாம் முன்னேற முடிஞ்சதுக்கு அவர்தான் காரணம்.

கலைமாமணி பட்டம் இன்னும் உங்களுக்கு கிடைக்கலன்னு ஒரு நண்பர் வருத்தப்பட்டார்.அவருக்கு என்ன சொல்லலாம்?

கலைமாமணி பட்டம் வாங்குற அளவுக்கு எணக்கு இன்னும் தகுதி இல்லனு நினைக்கிறேன்.

சுடர்வண்ணன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.11.83 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com