வீட்டில் செமத்தியான அடி  உதை - ரஜினிகாந்த்

பெங்களூரில் "நான் ஆணையிட்டால்" படம் திரையிடப்பட்டது.
வீட்டில் செமத்தியான அடி  உதை - ரஜினிகாந்த்

பெங்களூரில் "நான் ஆணையிட்டால்" படம் திரையிடப்பட்டது.

எப்படியாவது மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் சார் நடித்த திரைப்படத்தை முதல் நாள், முதல் காட்சியே  பாத்து  விட வேண்டும் என்று எனக்கு ஒரு வித ஏக்கம்.

பகல்  3 மணிக் காட்சிக்கு காலை 7 மணிக்கே போய்  டிக்கெட் கவுண்டர் முன்னால்  வரிசையில் நின்றேன். நேரம் செல்லச் செல்ல கூட்டம் பெருகியது. கியூ வரிசை நீண்டு கொண்டே போனது. டிக்கெட் கொடுக்கும் சமயத்தில் கூட்டம் அதிகமாகி அலைமோதியது.

எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இன்றைக்கு எம்.ஜீ.ஆர் சார் படம் பார்க்காமல் வீட்டுக்கு போகக்  கூடாது என்று ஒரு பிடிவாதம் எழுந்தது. 

ஒரு ஆள் ப்ளாக்கில் டிக்கெட் விற்றுக் கொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்து கொண்டு ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது. ஒரு ரூபாய் பத்து காசு டிக்கெட் விலை 15 ரூபாய். மற்றவர்கள் யோசிப்பதற்கு முன்பு பையில் கையை விட்டு பணத்தை எடுத்து நீட்டினேன். 

எப்படியாவது பார்த்தே தீருவது என்ற பிடிவாதத்துக்கு வெற்றி கிடைத்த்து விட்டது. 

படம் பார்த்து முடிக்கும் வரை ஒரே குஷிதான். அப்புறம்.?

வீட்டிற்கு எப்படி திரும்பி போவதென்ற பயம்.

மளிகை சாமான்கள் வாங்குவதற்காக வீட்டில் கொடுத்த 15 ரூபாயையும் ப்ளாக்கில் டிக்கெட் எடுத்து செலவழித்து விட்டேன்.

எதிர்பார்த்தது வீட்டில் தாராளமாக கிடைத்தது. செமத்தியான அடி  உதைதான்..!

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.01.82 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com