சிலுக்கு இல்லாமல் படம் ஓடாதுன்னு நான் சொன்னேனா?

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த புகழ் கிடைக்குமா?
சிலுக்கு இல்லாமல் படம் ஓடாதுன்னு நான் சொன்னேனா?

உங்களுக்கு இப்போது படங்களில் வாய்ப்பு குறைந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்வீர்களா?

நிச்சயமா ஒப்புக் கொள்ள மாட்டேன். எனக்கு டெய்லி படப்பிடிப்பு இருக்கு. இப்பவும் பிசியாத்தானிருக்கேன்.போன வருஷம் வரிசையா நான் நடிச்சா படங்களாவே வந்திருக்கலாம்.இப்போது அப்படி பார்க்கிறப்ப நான் நடிச்ச தமிழ்ப்படங்கள் குறைஞ்சிருக்கலாம்.எனக்கு சான்ஸ் குறைஞ்சு போச்சு, சிலுக்குக்கு மார்க்கெட் குறைஞ்சு போச்சு அப்டின்னு சொல்றவங்களப் பத்தி நான் கவலைப்பட முடியாது.

சிலுக்கு இல்லாமல் படம் ஓடாது என்ற நிலை இருந்தது..இப்போது அந்த நிலை மாறிவிட்டது அல்லவா? இதை மறுக்க முடியுமா?

சிலுக்கு இல்லாமல் படம் ஓடாதுன்னு நான் சொன்னேனா? யார் யாரோ அவங்க இஷ்டத்துக்கு துதி பாடிகிட்டிருந்தாங்க..என்னைத் தேடி வாய்ந்த வாய்ப்பை எல்லாம் மறுக்காம ஒப்புக்கிட்டு நடிச்சேன். ஒரு சீன், ரெண்டு சீ ன், ஒரு நாள் கால்ஷீட், ரெண்டு நாள் கால்ஷீட் னு எல்லாம் கேட்டாங்க.

மறுக்காம நடிச்சு கொடுத்தேன். அவங்க படம் ஓடுறதுக்கும் ஓடாததுக்கும் நானா பொறுப்பு? எத்தனை பெரிய நடிகர் நடிகை நடிச்சிருந்தாலும்,பெரிய டைரக்டர் இருந்தாலும், கதையில வெய்ட் இல்லனா படம் ஓடாது.எனக்கு படங்கள் ஓரளவு குறைஞ்சதுக்கு காரணம்- நானே குறைச்சுக்கிட்டதுதான். பேசுறவங்களுக்கு வேற வேலையே கிடையாது.

சினிமா உலகத்தை பத்தி விமர்சிக்கிறவங்க 'சிலுக்கை நம்பி இருக்கும் போக்கு மாற வேண்டும்' அப்டினு பேசுவதைக் கேட்கும்போது எப்படியிருக்கும்?

என் மேல தனிப்பட்ட முறையில அவங்களுக்கு எந்த விரோதமும் இருக்கிறதுக்கு நியாமில்லை. பொதுவா சினிமாவை பத்தின விமர்சனும்னு எடுத்துக்குவேன். என் பெயரைச் சொல்லி விமர்சனம் பண்ணுறவங்க மேல எனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்ல.  அப்படி யாருக்காவது கோபம் இருந்தா நான் கால்ஷீட் கொடுக்கலையே அப்டிங்குற கோபமத்தான் இருக்கும்.

சில படங்களில் கால்ஷீட் விஷயத்தில் படப்பிடிப்புக்கு ஓத்துழைப்பு தரவில்லை என்ற புகார் பற்றி?

சில நேரங்களில் ஓவர் ஒர்க் காரணமா எனது உடல்நிலை சரியில்லாம இருந்திருக்கும் போது எப்போதாவது     ஒரு முறை தாமதமாக வந்திருக்கலாம்.அது பட உலகில் சாதாரணமான விஷயம்.  அதுக்காக நான் தாமதமாக வருவேன், ஷூட்டிங் கேன்சல் பண்ணுவேன், ஒத்துழைக்க மாட்டேன்னு சொல்றதெல்லாம் மிகைப்படுத்தி சொல்றதே தவிர வேற எதுவும் இல்ல. 

பேட்டி: உத்தமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.02.84 இதழ்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com