ஒரு படத்திலாவது கிரிக்கெட் பிளேயராக நடிக்க வேண்டும் என்று ஆசை - கமல்ஹாசன்

நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் - கமல்ஹாசன்
ஒரு படத்திலாவது கிரிக்கெட் பிளேயராக நடிக்க வேண்டும் என்று ஆசை - கமல்ஹாசன்

என்னுடைய எட்டாவது வயதில் வீணை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ஆனால ஒருமுறை விளையாடிக் கொண்டிருக்கும் போது கை பிராக்சர் ஆனதால் வீணை கற்றுக் கொள்வதை அத்துடன் நிறுத்தி விட்டேன்.

ஒன்பதாவது வயதில் ஸ்கூலில் முன்றாவது மாடியிலிருந்து தவறிப்போய் கீழே விழுந்ததில் பலத்த அடி பட்டது.  சிதறி விழுந்த என் நோட்டுக்களை திரு. டி.கே.சண்முகத்தின் பிள்ளைகள் அவரிடம் ஒப்படைத்து  விட்டனர். அவற்றை திருப்பிக் கொடுப்பதற்காக என் வீட்டுக்கு வந்தவரிடம் என்னை  என் அப்பா ஒப்படைத்து விட்டார். டி .கே .எஸ் பிரதர்ஸ் குழுவில்தான் நான் முதன் முதலில் நடிக்கக் கற்றுக் கொண்டேன்.

பதினாலாவது வயதிற்கு மேல் குரு ஏன்.எஸ்.நடராஜனிடம் பரதநாட்டியமும், குரு நடராஜ ராமகிருஷ்ணனிடம் குச்சுப்புடியும், குரு குல்கர்னியிடம் கதக் நடனங்களையும் முறைப்படி கற்றுக் கொண்டேன். ஒருமுறை வட நாட்டு பயணத்தில் மயுர் நடனமாடும் பொழுது  கால்முறிந்ததால் சென்னை திரும்பி தங்கப்பன் டான்ஸ் மாஸ்டரிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்தேன். அவர் அன்னை வேளாங்கன்னி  படத்தை இயக்கிய பொழுது அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து டைரக்ஷனைப் பற்றி கற்றுக் கொண்டேன்.

அபூர்வ ராகங்கள் படத்தில் செய்த பிரசன்னா கேரக்டருக்காக மிருதங்கம் கற்றுக் கொண்டேன். ராஜ பார்வை படத்தில் குருடனாக நடித்த பொழுது குருடர் பள்ளிகளுக்குச் சென்று அவர்களின் நடை உடை பாவனைகளைக்  கற்றுக் கொண்டேன்.அதே படத்தில் வயலினிஸ்ட்டாக நடிப்பதற்காக முழு வருடம் வயலின் கற்றுக் கொண்டேன்.       

ஓர் ஒரு படத்திலாவது கிரிக்கெட் பிளேயராக நடிக்க வேண்டும் என்று ஆசை.அப்படியொரு சான்ஸ் கிடைத்தால் சிறு வயதில்  கற்றுக்  கொண்ட கிரிக்கெட்டுக்கு மேலும் மெருகேற்றிக் கொள்வேன்.

போட்டோகிராபியில் எனக்கு ஆர்வம் உண்டு. லிட்டரேச்சர் எனக்கு ரொம்பவும் பிடித்த விஷயம்.தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நட்பும் அறிமுகமும் எனக்கு உண்டு.என் உணர்ச்சிகள் தூண்டப்படும் போதெல்லாம் அவற்றை புதுக்ககவிதைகளாக வெளிப்படுத்துகிறேன்.

கர்நாடக சங்கீதத்திலும் பியானோவிலும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. எல்லாவற்றையும் விட என்னைச் சுற்றியுள்ள மக்களிடம் இருந்துதான் நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். கற்றுக் கொண்டும் வருகிறேன்.

பேட்டி: வாமாலி

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.05.83 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com