கண்டிப்பாக கே.பி வர மாட்டார் என்றுதான் நினைத்தேன் - நடிகர் கோபாலகிருஷ்ணன்

கே.பாலசந்தர் அனுபவங்கள் - வி.கோபாலகிருஷ்ணன்  
கண்டிப்பாக கே.பி வர மாட்டார் என்றுதான் நினைத்தேன் - நடிகர் கோபாலகிருஷ்ணன்

நீர்க்குமிழி நாடகம் படமாக்கப் பட வேண்டும் என்று கே.பாலசந்தரை தயாரிப்பாளர் அணுகிய பொழுது அவர் ஒரே ஒரு கண்டிஷன்தான் போட்டார். நான்,.நாகேஷ், சௌகார் ஆகிய மூவரும் மேடையில் செய்த அதே வேடத்தை சினிமாவிலும் செய்தால்தான் நான் டைரக்ட் செய்வேன் என்று. திரைப்படத்துறையில் டைரக்ட் செய்ய படம் கிடைக்காதா என்று ஏங்குபவர்கள் பலர். பணம் கொடுத்து டைரக்ட்  செய்ய முயல்பவர்கள் பலர்.

இவர்களிலிருந்தெல்லாம் மாறுபட்டு நின்றவர்தான் கே.பி. , முதல் படம் யாரை வேண்டுமானாலும்போட்டுக் கொள்ளுங்கள் டைரக்ட் செய்கிறேன் என்று தனது தனித்திறமையை நிரூபித்துக் காட்டி விட்டார்.

சமீபத்தில் அவர் மகன் கார் விபத்தில் அடிபட்டு மருத்துமனையிலிருந்தார். பையனை மருத்துவமனையில் பார்த்து விட்டுட்டு கே.பி யை பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது இரவு சுமார் 10 மணியிருக்கும். நான் வந்திருக்கிறேன் என்று தெரிந்தவுடன் கீழே ஓடி வந்தது மட்டும் அல்லாமல் என்னை உட்கார வைத்து ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.நான் மணியாகிறதே என்று எழுந்திருக்க முயன்ற பொழுதெல்லாம் உட்கார்  போகலாம் என்று சொல்லி பையனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.   

கலைமாமணி விருது பெற்றிருந்த என்னையும் , ஜி.பி,ஏன் சகோதரர்களையும் பாராட்டி கவுரவிக்க ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். கே.பி வருவதாக இருந்தது. ஆனால் கண்டிப்பாக அவர் வர மாட்டார் என்றுதான் நினைத்தேன். காரணம் மருத்துவமனையில் பையன்; மகளின் திருமணம்.ஆனால் வந்தது மட்டுமல்லாமல் என்னையும் பாராட்டி பேசியது மறக்க முடியாதது.

சந்திப்பு: சலன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.05.83 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com