அதை போல 'ரிஸ்க்' எடுக்கவே கூடாது: சிவாஜி கணேசன் அட்வைஸ்

1982-ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலஹாசன்...
அதை போல 'ரிஸ்க்' எடுக்கவே கூடாது: சிவாஜி கணேசன் அட்வைஸ்

1982-ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலஹாசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சந்தித்து அவரது காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றுக் கொண்டார். 

கமலஹாசனை மனப்பூர்வமாக பாராட்டி வாழ்த்தினார் சிவாஜி."இந்தியாவின் சென்ற ஆண்டின் சிறந்த நடிகராக நீ தேர்ந்தெடுக்கபட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி. தொடர்ந்து இது போல பல வெற்றிகளை நீ காண வேண்டும். பல மொழிப்படங்களில் நடித்து முன்னேற்றம் அடைந்திருப்பது குறித்தும் மகிழ்ச்சியுறுகிறேன். ஆனால் 'ரிஸ்க்' எடுத்துக் கொண்டு ஆவேச அவசரமாக சண்டையிடுவது சரியல்ல. சில சந்தர்ப்பங்களில் அதனால் ஆபத்துகள்  நேரிடலாம். அப்படிப்பட்ட பெரிய விபத்து ஒன்றிலதான் சமீபத்தில் நீயே சிக்கிக் கொண்டாய்! தெய்வாதீனமாக பெரிய காயத்தோடு தப்பியிருக்கிறாய்! அதை போல 'ரிஸ்க்' எடுக்கவே கூடாது.  எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு விட்டால் பாதிக்கப்படுவது நீ மட்டும் அல்ல! பல பேரை அவதிக்குள்ளாகி விடும்! அதனால் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும்" என்று கூறி தனக்கு ஏற்பட்ட விபத்துக்களைப் பற்றிக் கூறி, அதனால் ஏற்பட்ட காயங்களின் வடுக்களை கமலஹாசனுக்கு சிவாஜி காட்டினார்.     

அதன் பின்னர் கமல்ஹாசன் சிவாஜியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

(சினிமா எக்ஸ்பிரஸ்01.06.83 இதழ்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com