எடிட்டிங் என்பது சாதாரண விஷயமில்லை - எடிட்டர் பி.லெனின்

கத்தரி பிடித்தவர்கள் எல்லாம் எடிட்டர் இல்லை - எடிட்டர் லெனின்
எடிட்டிங் என்பது சாதாரண விஷயமில்லை - எடிட்டர் பி.லெனின்

என்னுடைய தந்தை பீம்சிங்குடன் 'மெஹர்பன்' எடுத்துக் கொண்டிடுந்த காலத்திலிருந்தே அவருடன் சென்று வருவது என் வழக்கம். ஆறாவது வயதில் இருந்தே ஸ்டூடியாக்களுடனும், பிலிமுடனான பழக்கம் தொடங்கி விட்டது. இதை இப்படிச் செய்யுன்னு அவர் எனக்கு எப்போதும் சொல்லிக் கொடுத்தது கிடையாது. அவர் பாட்டுக்கு அவர் வேளையில் ஈடுபட்டிருப்பார். நான் ட்ராலியைத் தள்ளுவதிலிருந்து 'கேனை' தூக்கிக் கொண்டு போவது வரை, அனைத்திலும் அவருக்கும் உதவியாளராக பணியாற்றிக் கொண்டே மெல்ல மெல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

சினிமாவில் முதலில் எடிட்டிங்கும் பின்னர் டைரக்ஷ்னும் பண்ண ஆரம்பித்தேன். அனால் இவையனைத்தும் எனது எண்ணங்களை திரையில் பிரதிபலிக்க உதவும் கருவிகளே அன்றி வேறில்லை. 'வீடு வரை உறவு' நான் எடிட்டராக பணியாற்றி வெளிவநத முதல் படம். அதன் பின்னர் உதிரிப்பூக்கள், பன்னீர் புஷ்பங்கள், பூட்டாத பூட்டுக்கள், மெட்டி, கோழி கூவுது, அழகிய கண்ணே என்று பல படங்களை எடிட் செய்திருக்கிறேன். நதியைத் தேடி வந்த கடல், பண்ணைப்புரத்து பாண்டவர்கள், எத்தனை கோணம் எத்தனை பார்வை ஆகியவை நான் டைரக்டராக பணியாற்றின படங்கள். 

எடிட்டிங் என்பது எல்லோரும் நினைப்பதைப் போல சாதாரண விஷயமில்லை. ஒரு எடிட்டருக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டியது அத்தியாவசியம்.எடிட்டிங்கிலோ எல்லாவற்றையும் கொண்டு வந்து விடலாம். 

என்னைப் பொறுத்த வரை ஒரு படத்தை எப்படி எடிட் செய்கிறேன் என்பதை விளக்கினால் மேலே சொன்னதன் காரணம் விளங்கும்.

முதலில் ஒரு படத்தின் கதை என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்ட பின்னர்தான் மற்ற எல்லா விஷயங்களும்.கதையை அடுத்து காரெக்டர்ஸ் என்ன, சாங் சீக்வன்ஸ் எப்படி, முக்கியமான காட்சிகள் எவை என்று கொஞ்சம் கொஞ்சமா படத்தின்  ஸ்கெலெட்டனை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவேன். இவற்றையெல்லாம் வைத்து என்னுடைய உள்மனதில் நானே 'டெவலப்' செய்து சீன பை சீனாக திரையிட்டு பார்த்துக் கொள்வேன்.அப்புறம் டைரக்டர்கள் கொண்டு வந்து கொடுக்குற சீன்களோட,நான் மனசுல ஷூட் பண்ணி வச்சிருக்கிற சீன்களை கம்பேர் பண்ணி பாத்து சீக்வன்ஸா பாக்குறப்ப படம் நல்லா வந்துடுது. இதுக்கு படத்தோட நாம ரொம்ப இன்வால்டா இருந்து வொர்க் பண்ணத்தான் முடியும்.      

எடிட்டிங்குக்கு ம்யூசிக் சென்ஸ் அவசியம். ஒரு ரம்மியமான காட்சி படத்துல வருதுன்னு வச்சுக்குவோம் அந்த  இடத்துல வசனத்தை கட் பண்ணி ம்யூசிக் டைரக்ட்டருக்கு நல்ல ரீ ரிக்கார்ட் பண்ண வாய்ப்பளிக்கலாம். சாங்க்ஸை பிக்சரைஸ் பண்ணிக் கொண்டு வர்றப்ப, அதை வெட்டி ஒட்ற போது, பாடல்ல வர்ற ரிதத்தோட ஒத்துப்போனா, பாட்டுக்கு வெய்ட் கூடும். பாடல் காட்சிகளில் சீனுக்கு ஏத்த மாதிரி இடையிடையே நேச்சுரல் காட்சிகளை இணைத்து சீனை அழகுபடுத்தலாம்.     

பேட்டி: வாமாலி

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.05.83 இதழ்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com