நடிப்பைத் தவிர மற்ற விஷயங்களில்தான் அக்கறை  

நடிக நடிகைகள் இப்போது நிறைய பேர் அறிமுகமாகி கொண்டிருக்கிறார்கள். அதைப்  பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
நடிப்பைத் தவிர மற்ற விஷயங்களில்தான் அக்கறை  

நடிக நடிகைகள் இப்போது நிறைய பேர் அறிமுகமாகி கொண்டிருக்கிறார்கள். அதைப்  பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.ஆனால் அவ்வாறு அறிமுகமாகிறவர்கள் சில படங்களுடன் 'ஓய்வு' எடுத்துக் கொள்ளும்படி ஆகி விடுவது வருத்தத்தைக்  கொடுக்கிறது. அதற்கு காரணங்கள் என்ன என்பதை புதுமுகங்கள் ஆராய வேண்டும் என்கிறார் கே.ஆர்.விஜயா. 

புதுமுகங்கள் நடிப்பில் இன்னும் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் பொழுது அந்த கேரக்டரில் முழுக்க முழுக்க தன்னை இன்வால்வ் பண்ணிக் கொள்ள வேண்டும். படப்பிடிப்புக்கு வந்து விட்டால் நடிப்பு ஒன்றைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தக் கூடாது. நான் முதன்முதலில் 'கற்பகம்' படத்தில் டைரக்டர் கே.எஸ்.ஜி மூலம் அறிமுகமான சமயத்தில் இருபத்து நான்கு மணி நேரமும் அந்த கதாபாத்திரத்தை பற்றியும், நடிப்பை பற்றியும்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். தவிர வேறு விஷயங்களுக்கு என் கவனம் போதாது. நான் அந்த மாதிரி ட்ரைனிங்கில் பயின்றவள்.   

இன்று புதிதாக அறிமுகமாகியுள்ள சிலர் நடிப்புத் தவிர மற்ற விஷயங்களில் தான் அதிக அக்கறை காட்டுவதாகத் தோன்றுகிறது. செட்டுக்கு வந்த பின்பு டைரக்டர் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டு 'ஏதோ' நடித்து விட்டு போய் விடுகிறார்கள்.இதுதான் கேரக்டர்! இப்படித்தான் நடிக்க வேண்டும்! என்ற 'இன்வால்வ்மென்ட்' அவர்களுக்கு வருவதில்லை. வந்த வேகத்திலேயே அவர்கள் திரும்பி சென்று விடுவதற்கு அதுதான் அடிப்படை காரணம். சாவித்ரி, பத்மினி, சவுகார் ஜானகி, ஜமுனா, சரோஜா தேவி போல இன்றுள்ளவர்களால் வர முடியுமா?

அது போலவே புதிய டைரக்டர்களும் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். எந்த காரணத்தினாலோ ஒரு புது டைரக்டரின் ஒரு புதுப்படம் வெற்றிகரமாக ஓடி விட்டால் அந்த டைரக்டர்தான் சாமர்த்தியசாலி என்று ஆகி விடுகிறது. பலபேருடைய ஆற்றலினாலும் ஒத்துழைப்பினாலும் ஒரு படம் வெற்றி பெற முடியும். புதிய டைரக்டர்களை பற்றி நான் குறை கூறவில்லை. அவர்களது எண்ணமும் திறனும் அவரசரத்தாலும் அனுபவமின்மையினாலும் வீணாகி விடக் கூடாது  என்பதற்காகத்தான் குறை கூறுகிறேன்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.05.84 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com