அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 1-வது மெயின் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதேபோல், பல சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதுதவிர, கால்வாய்கள் சரிவர செப்பனிடப்படாமல் உள்ளன. ஆகவே, தொழிற்பேட்டையில் சாலைகள், சீரமைப்பு, கால்வாய்கள் சீரமைப்பு, தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி போன்ற வசதிகளை நிறைவேற்ற மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம். விவேக், அண்ணா நகர்.