சாலைகள் சீரமைக்கப்படுமா?

சென்னை புதிய பெருங்களத்தூர் பாரதி அவன்யு பிரதான சாலை, சித்ரா அவன்யு பிரதான சாலை, பழைய பெருங்களத்தூர் தாய் மூகாம்பிகை பிரதான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன.

சென்னை புதிய பெருங்களத்தூர் பாரதி அவன்யு பிரதான சாலை, சித்ரா அவன்யு பிரதான சாலை, பழைய பெருங்களத்தூர் தாய் மூகாம்பிகை பிரதான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மழை காலம் வரும்முன் இந்தச் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.ல.கணபதி, பழைய பெருங்களத்தூர்.
ரேஷன் பொருள் கிடைக்குமா ?
வடி, ஜே.பி.எஸ்டேட் பகுதியிலுள்ள ரேஷன் கடையில் பொருள்கள் தடையின்றி கிடைப்பதில்லை. 10-ஆம் தேதிக்குப் பிறகு கடைக்குச் சென்றால் கோதுமை, அரிசி, சர்க்கரை போன்ற பொருள்கள் இருப்பு இல்லை எனக் கூறுகின்றனர். மாதத்தின் முதல் வாரத்தில் பொருள்கள் வருவதில்லை. இதனால், இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். ரேஷன் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com