பழுதடைந்து வரும் எம்.ஐ.டி. மேம்பாலம்

குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலம் திறப்பு விழாவின்போது, மேம்பாலத்தின் காலியான கீழ் பகுதியை பூஞ்செடிகள் வளர்த்து அழகுப்படுத்தப் போவதாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அறிவித்தது.

குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலம் திறப்பு விழாவின்போது, மேம்பாலத்தின் காலியான கீழ் பகுதியை பூஞ்செடிகள் வளர்த்து அழகுப்படுத்தப் போவதாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அறிவித்தது. பெயருக்கு சில செடிகளை வைத்துவிட்டு, அதையும் பராமரிக்காமல் முடியவில்லை. மேலும், பூஞ்செடிகளைச் சுற்றி கிரில் வேலி அமைக்கப்பட்டது. ஆனால், அது வார்தா புயலின்போது சாய்ந்துவிட்டது. தற்போது, மேம்பாலத்தின் கீழ் பகுதி குப்பை கிடங்காகவும் திறந்தவெளி கழிப்பறையாகவும் மாறிவிட்டது. எனவே, உடனடியாக குப்பையை அகற்றி வேலியுடன் செடிகளை நட்டு அழகுப்படுத்த வேண்டுகிறோம்.

வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com