சிற்றுந்து வசதி தேவை!

அண்ணாநகர் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்குச் சென்று வர சரியான பேருந்து வசதி இல்லாமல் இருந்தது.

அண்ணாநகர் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்குச் சென்று வர சரியான பேருந்து வசதி இல்லாமல் இருந்தது. இதுகுறித்து தமிழக அரசிடம் முறையிட்டதன் அடிப்படையில் அயன்புரம் முதல் அமைந்தகரை வரை செல்லும் சிற்றுந்து (எஸ். 55) எங்களது வ.உ.சி. நகர் வழியே கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்தது. இதனால், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் உள்பட ஏராளமானோர் பயனடைந்து வந்தனர். தற்போது அந்த வழித்தடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேண்டுமென்றே எஸ்.43 என்ற வழித்தடத்தில் வேறு பாதையில் திசை மாற்றியுள்ளனர். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டும் பதிலில்லை. எனவே, அந்த வழித்தடத்தை எங்களது பகுதி வழியே மீண்டும் இயக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எஸ்.பழனி, அண்ணாநகர் கிழக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com