தகவல் பலகை தேவை!

தமிழகத்திலுள்ள பல ஏரிகளைத் தூர்வாரி புனரமைக்கவும், இப்பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது.

தமிழகத்திலுள்ள பல ஏரிகளைத் தூர்வாரி புனரமைக்கவும், இப்பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதே சமயம், ஏரிகளைப் புனரமைக்கும்போது ஏரியின் சர்வே எண், கொள்ளளவு, பரப்பளவு, பாசன வசதி போன்ற தகவல்களைக் குறிப்பிட்டு ஏரிக்கரையில் தகவல் பலகையை வேண்டும். இதன் மூலம், ஏரிகளின் விபரங்கள் பொதுமக்களுக்கும் தெரிய வரும். குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஏரி தொடர்பான தகவல் பலகைகளை நடுவதால், ஆக்கிரமிப்புகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு.

-வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com