கோயில் குளத்தில் குப்பை!

வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தெருவில் பெருமாள் கோயில் குளத்தின் ஒரு பகுதி உள்ளது. இக்குளத்தின் பிரதான படிக்கட்டின் வழியே வில்லிவாக்கம் சுற்றுப்புறப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கலந்து குளம் மாசுபட்டுள்ளது.

வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தெருவில் பெருமாள் கோயில் குளத்தின் ஒரு பகுதி உள்ளது. இக்குளத்தின் பிரதான படிக்கட்டின் வழியே வில்லிவாக்கம் சுற்றுப்புறப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கலந்து குளம் மாசுபட்டுள்ளது. குளத்தின் படிக்கட்டு அருகே 10-க்கும் மேற்பட்ட குப்பை வண்டிகள் குப்பை சேகரித்து நிறுத்தப்படுகின்றன. அருகே வசிப்போரும் தினசரி சேரும் குப்பையை இந்த வண்டிகளில் கொட்டுகின்றனர். வண்டி நிறைந்தபின் கொட்டப்படும் குப்பை குளத்துக்குள் விழுகிறது. எனவே, 94-ஆவது வட்டத்தின் மாநகராட்சி செயற்பொறியாளர் இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து குப்பை வண்டிகள் நிறுத்தப்படுவதை நிரந்தரமாகத் தடுக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com