பேருந்துகள் நிற்குமா?

கே.கே.நகரில் இருந்து பிராட்வே வரை செல்லும் 17 டி வழித்தட மாநகரப் பேருந்து எழும்பூர், பெரியமேடு, சென்ட்ரல் வழியாகச் செல்கிறது.

கே.கே.நகரில் இருந்து பிராட்வே வரை செல்லும் 17 டி வழித்தட மாநகரப் பேருந்து எழும்பூர், பெரியமேடு, சென்ட்ரல் வழியாகச் செல்கிறது. இந்த வழியாக செல்லும் ஒரு பேருந்து இதுதான். எனினும், இந்த வழித்தடத்தில் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பேருந்துகளே அதிகமாக இருப்பதால், பெரியமேடு எவரெஸ்ட் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்பதில்லை. இந்த நிறுத்தத்துக்கு அருகில் ஏராளமான தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் இருக்கின்றன. அரசு அலுவலகங்களுக்கு செல்லவும் ஏராளமானோர் பேருந்துகளுக்காக காத்திருந்து ஏமாறுகின்றனர். மேலும், இந்தப் பேருந்துகள் பெரும்பாலும் காலியாகவே சென்று அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, எவரெஸ்ட் பேருந்து நிறுத்தத்தில் டீலக்ஸ் உள்ளிட்ட பேருந்துகளும் நிற்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அப்துல் சலாம், புதுப்பேட்டை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com