மடிப்பாக்கத்தில் கண்ணகி தெரு, அருட்ஜோதி சாலை போன்ற பல சாலைகளில் உள்ள கழிவுநீர் ஓடைகள் பிளாஸ்டிக் குப்பைகளாலும் கழிவுகளாலும் அடைத்துக் கொண்டு துர்நாற்றம் வீசுகிறது. நேரு தெரு, புவனேஸ்வரி தெரு போன்றவற்றில் கழிவுநீர் சாக்கடைகளே இல்லை. மாநகராட்சி ஆட்சி விதிகளின்படி ஒவ்வொரு தெருவிலும் மூடப்பட்ட சாக்கடைகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.