முதியோர் பிரச்னை குறையுமா?

உதவித்தொகை பெறுவதிலும் இலவச பேருந்து டோக்கன் பெறுவதிலும் முதியோர்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றனர். முதியோர் உதவித்தொகை ரூ.1500 தரப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.

உதவித்தொகை பெறுவதிலும் இலவச பேருந்து டோக்கன் பெறுவதிலும்  முதியோர்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றனர். முதியோர் உதவித்தொகை ரூ.1500 தரப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் தமிழக அரசு இன்னமும் செயல்படுத்தவில்லை. கைரேகை பதிவு செய்ய ஒரு வாரம், பணம் வழங்க ஒன்றிரண்டு வாரமாகும். இதற்குப் பதிலாக வங்கிக் கணக்கில் போடலாம்.
பேருந்து டோக்கன் பெற 3 மாதத்துக்கு ஒரு முறை ஆதாரங்கள் கொடுக்க வேண்டும். இதற்குப் பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை ஆதாரங்கள் சமர்ப்பித்தால் போதும் அல்லது நிரந்தர அட்டை கொடுக்க வேண்டும். அதிகாரிகள் கவனிப்பார்களா?

பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com