சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை மெட்ரோ ரயில் சேவை உள்ளது. அங்கிருந்து தாம்பரம் செல்ல வேளச்சேரி பேருந்து நிலையத்துக்குத்தான் போக வேண்டியுள்ளது. வேளச்சேரியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மவுண்ட் இடையே 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைந்து முடித்து சேவையை தொடங்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
-ஜி. லட்சுமி வாசுதேவன், திருவான்மியூர்.