தெருக்களில் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்படுமா?

சென்னை பெருமாநகராட்சி  7-ஆவது மண்டலம், 83-ஆவது வட்டத்தில் உள்ள கொரட்டூர், வெற்றி நகரில் பல தெருக்களுக்கு வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்படவில்லை

சென்னை பெருமாநகராட்சி  7-ஆவது மண்டலம், 83-ஆவது வட்டத்தில் உள்ள கொரட்டூர், வெற்றி நகரில் பல தெருக்களுக்கு வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்படவில்லை. இது  வளர்ச்சியடைந்து வரும் பகுதி. இதனால் இப்பகுதிக்கு முகவரி தேடி வருவோர் அடையாளம் காண மிகுந்த சிரமப்படுகின்றனர். 
இதுகுறித்து முறையிட்டதன்பேரில், பெருமாநகராட்சி உதவி செயற்பொறியாளர்  அவரது உதவியாளரை அனுப்பி பார்வையிட்டதுடன் சரி. இதுவரை தெருக்களின் பெயர்ப்பலகை வைக்கப்படவில்லை. இனியாவது இப்பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோதை  ஜெயராமன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com