ஆராய்ச்சிமணி

நூலகம் சீராகுமா?

மணலிபுதுநகரில் உள்ள பொதுநூலகத்தில் தரைகள், சுவர்கள் விரிசலடைந்து சிதிலமடைந்துவிட்டன.

20-02-2017

ஆபத்தான நிலையில் மின்கம்பம்!

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செக்டரின் 49-ஆவது தெருவில் சாலை விளக்குடன் கூடிய மின்கம்பத்தின் (எண் 40) நிலை மிகவும் மோசமாக உள்ளது.

20-02-2017

மேம்பாலம் வேண்டும்...

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் இருந்து எதிர்ப்புறம் உள்ள காந்தி இர்வின் சாலைக்கு செல்ல பயணிகள் சிரமப்படுகின்றனர்.

13-02-2017

கழிவுநீர் அகற்றப்படுமா?

சென்னை, டிமலஸ் சாலை கேசவப்பிள்ளை பூங்கா அருகே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கட்டடத்தின் பின்புறம் கழிவுநீரும் குப்பையும் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளன.

13-02-2017

சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்...

மீஞ்சூரை அடுத்த அரியன்வாயல் கிராமத்தில் உள்ள அமாவாசைக் குளத்தில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.

13-02-2017

வேகத்தடை அமைக்க வேண்டும்...

சென்னை மாநகராட்சி மண்டலம் 3-க்கு உள்பட்ட 29-ஆவது வட்டம் சின்னசேக்காடு பல்ஜிபாளையம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்-பார்த்தசாரதி தெரு சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

13-02-2017

கூடுதல் கவுன்ட்டர் அமைக்கப்படுமா?

கோடம்பாக்கம், பழவந்தாங்கல், தாம்பரம், சானிடோரியம் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ளது போலவே பெருங்களத்தூர் ரயில் நிலையத்திலும் 3 மற்றும் 4-ஆம் நடைமேடைகளில் பயணச் சீட்டு கவுண்டர் அமைக்க வேண்டும்.

13-02-2017

சாலையோர குப்பை அகற்றப்படுமா?

ஜவஹர் நகர் பிஸ்ஸட் சாலையில் இருந்து பேடன் பவுல் சாலை வரை குப்பை வீசப்படுகிறது.

13-02-2017

இரு வழிப் பாதை!

காசி திரையரங்கம் அருகேயுள்ள மேம்பாலம் ஒருவழிப் பாதையாக உள்ளது. இதை இருவழிப்பாதையாக மாற்றினால், போக்குவரத்து நெரிசல் குறையும்.

06-02-2017

குடிநீர் பிரச்னை!

தி.ரு.வி.க. நகரில் உள்ள கிருஷ்ணா நகர் முதல் தெருவில் மெட்ரோ குடிநீர் அழுத்தம் குறைக்கப்பட்டதால், குழாய்களில் சில நாள்களாக தண்ணீர் வருவதில்லை.

06-02-2017

மீண்டும் இயக்கப்படுமா?

மேற்கு முகப்பேரில் இருந்து அம்பத்தூர், ஆவடிக்குச் செல்ல நேரடியாக பேருந்து வசதி இல்லை.

06-02-2017

பேருந்து தேவை!

பெசன்ட் நகரில் இருந்து தாம்பரம் செல்வதற்கு நேரடி பேருந்து வசதி தேவை. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி ரயில் நிலையம், பல்லாவரம் வழியாக பேருந்தை இயக்கலாம்.

06-02-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை