பகுதி - 392

வட ஆற்காட்டில் பாலாற்றங்கரையிலுள்ள வேப்பூர் என்ற தலத்துக்கான பாடலிது. 

வட ஆற்காட்டில் பாலாற்றங்கரையிலுள்ள வேப்பூர் என்ற தலத்துக்கான பாடலிது.  ‘உணர்வோடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி வடிவினை உனது அழகிய திருவார்ந்த வாக்கால் மொழிந்து அருள வேணும்’ என்று கேட்கிறது.  அனுபூதி பெற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய வடிவத்தை உபதேசித்தருள வேண்டும்’ என்பது சுருக்கமான பொருள்.

ஒற்றொழித்து அடிக்கு 23 எழுத்துகளும்; ஒவ்வொரு அடியிலும் (ஒற்றொழித்து) முதலாறு எழுத்துகள் குறிலாகவும்; 7, 9 ஆகிய எழுத்துகள் நெடிலாகவும்; ஒற்றோடு 8, 15 ஆகிய எழுத்துகள் மெல்லொற்றாகவும் அமைந்த பாடல்.

தனதன தனதன தனதன தாந்த
      தாத்தான தந்த -  தனதான
குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
         கூத்தாடு கின்ற- குடில்பேணிக்
      குகையிட மருவிய கருவிழி மாந்தர்
         கோட்டாலை யின்றி - யவிரோதம்
வரஇரு வினையற உணர்வொடு தூங்கு
         வார்க்கே விளங்கு -  மனுபூதி
      வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த
         வாக்கால்மொ ழிந்த - ருளவேணும்
திரள்வரை பகமிகு குருகுல வேந்து
         தேர்ப்பாகன் மைந்தன் - மறையோடு
      தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து
         தீப்பாய இந்த்ர - புரிவாழ
விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு
         வேற்கார கந்த -  புவியேழும்
      மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த
         வேப்பூர மர்ந்த -  பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com