பகுதி - 364

பிரபலமான திருப்புகழ்ப் பாக்களில் ஒன்றான


திருச்செந்தூர் தலத்துக்கான பாடலை இன்று பார்க்கிறோம்.  பிரபலமான திருப்புகழ்ப் பாக்களில் ஒன்றான இது இறைவனை மயில் மீது அமர்ந்த கோலத்தில் எழுந்தருளும்படி வேண்டுகிறது.

சந்த அமைப்பில் மெல்லொற்று, வல்லொற்று, குறில், நெடில் எல்லா வகையும் கலந்தது.  அடிக்கு ஒற்றுநீக்கி 34 எழுத்துகள்; ஒவ்வொரு மடக்கிலும் 5, 7, 9 ஆகிய எழுத்துகள் நெடில், மற்ற யாவையும் குறில்; ஒற்று சேர்த்து ஒவ்வொரு மடக்கிலும் இரண்டாமெழுத்து மெல்லொற்று; பத்தாம் எழுத்து வல்லொற்று.

தந்ததன தான தானத் தான
      தந்ததன தான தானத் தான
      தந்ததன தான தானத் தான               தனதான

முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
         சந்தமொடு நீடு பாடிப் பாடி
         முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி      யுழலாதே
      முந்தைவினை யேவ ராமற் போக
         மங்கையர்கள் காதல் தூரத் தேக
         முந்தடிமை யேனை யாளத் தானு      முனைமீதே

திந்திதிமி தோதி தீதித் தீதி
         தந்தன தான தானத் தான
         செஞ்செணகு சேகு தாளத் தோடு       நடமாடுஞ்
      செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
         துங்கஅநு கூல பார்வைத் தீர
         செம்பொன்மயில் மீதி லேயெப் போது  வருவாயே

அந்தண்மறை வேள்வி காவற் கார
         செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
         அண்டருப கார சேவற் கார             முடிமேலே
      அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
         குன்றுருவ ஏவும் வேளைக் கார
         அந்தம்வெகு வான ரூபக் கார          எழிலான

சிந்துரமின் மேவு போகக் கார
         விந்தைகுற மாது வேளைக் கார
         செஞ்சொல டியார்கள் வாரக் கார       எதிரான
         செஞ்சமரை மாயு மாயக் கார
         துங்கரண சூர சூரைக் கார
         செந்தினகர் வாழு மாண்மைக் கார      பெருமாளே.

குறிப்பு

தினந்தோறும் திருப்புகழ் பகுதியை, தவிர்க்க முடியாத சில காரணங்களால் கடந்த சில நாட்களாகப் பதிப்பிக்க முடியவில்லை. அக்டோபர் 4-ம் தேதி முதல் தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com