பகுதி - 710

உன் கழலை நினைக்கும் பேற்றை
பகுதி - 710

‘உன் கழலை நினைக்கும் பேற்றைத் தரவேண்டும்’ என்று வேண்டுகிற இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் நான்கு குற்றெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றையும் கொண்டு அமைந்திருக்கின்றன.


தனதன தனதந் தனதன தனதந்
      தனதன தனதந்                     தனதான

இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
         புவிதனி லினமொன்             றிடுமாதும்

எழில்புதல் வருநின் றழுதுள முருகும்
         மிடர்கொடு நடலம்               பலகூறக்

கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்
         டுயிரினை நமனுங்               கருதாமுன்

கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
         கழலிணை கருதும்               படிபாராய்

திருமரு வியதிண் புயனயன் விரியெண்
         டிசைகிடு கிடவந்                 திடுசூரன்

திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
         சிடவலி யொடுகன்               றிடும்வேலா

அருமறை யவரந் தரமுறை பவரன்
         புடையவ ருயஅன்               றறமேவும்

அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
         கருணையி லுறையும்            பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com