பகுதி - 713

நாடிவந்து தொழுகின்ற அன்பர்களிடத்திலே
பகுதி - 713

பதச் சேதம்

சொற் பொருள்

நாடி தேடி தொழுவார் பால்

 

 

நான் நத்து ஆக திரிவேனோ

 

நத்து ஆக: நத்துதலாக,
விருப்பமாக;

மாட கூடல் பதி ஞான     

 

கூடற்பதி: மதுரை—இதை 
துவாதசாந்தத்தலம் என்பார்
தணிகைமணி செங்கல்வராய
பிள்ளையவர்கள்.  விளக்கத்தில்
மேலும் காண்க;

வாழ்வை சேர தருவாயே

 

 

பாடல் காதல் புரிவோனே

 

 

பாலை தேன் ஒத்து அருள்வோனே

 

 

ஆடல் தோகைக்கு இனியோனே

 

ஆடல் தோகைக்கு: மயிலுக்கு—
அல்லது மயிலை ஒத்த
வள்ளிக்கு;

ஆனைக் காவில் பெருமாளே.

 

 

நாடித் தேடித் தொழுவார்பால்... உன்னை நாடிவந்து தொழுகின்ற அன்பர்களிடத்திலே,

நான் நத்தாகத் திரிவேனோ... நான் விருப்பம்கொண்டு திரியமாட்டேனா?

மாடக் கூடற் பதி... மாடங்கள் நிறைந்த கூடல் நகரம் எனப்படும் (துவாதசாந்தத் தலமாகிய) மதுரையாகிய யோகஸ்தானத்தில்*

(விளக்கத்தைக் கீழே காண்க)

ஞான வாழ்வைச் சேர தருவாயே... ஞானவாழ்வைப் பெறும்படியாக அருள்புரியவேண்டும்.

 பாடற் காதற் புரிவோனே... தமிழ்ப் பாடல்களை விரும்பிக் கேட்பவனே!

பாலைத் தேனொத்து அருள்வோனே... பாலையும் தேனையும் ஒத்த இனிமையான அருளைத் தருபவனே!

ஆடற் றோகைக்கு இனியோனே... ஆடும் மயில்போன்றவரான வள்ளிக்கு இனியவனே!

ஆனைக் காவிற் பெருமாளே.... திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே!

*துவாதசாந்ததத் தலம்.  மதுரை துவாதசாந்தத் தலம் என்று அழைக்கப்படுவது.

 தன்பெருந் தன்மையை யுணர்ந்திலை கொல் சிவாராச

தானியாய்ச் சீவன்முத்தித்

தலமுமாய்த் துவாதசாந் தத்தலமு மானதித்

தலமித் தலத்து…

என்று மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ், அம்புலிப் பருவம், பாடல் ஆறில் சொல்லப்படுகிறது.  இப்படிப் பல இடங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.  துவாதசாந்தம் என்பது தலை உச்சிக்கு மேலே பன்னிரண்டு அங்குல உயரத்தில் உள்ள யோகஸ்தானம்.  மதுரை அத்தகைய தலம்.  அந்த நிலையில் ஞானத்தை அடையவேண்டும் என்று கோருகிறார்.


சுருக்க உரை:

பாலையும் தேனையும் ஒத்த இனிய அருளை வழங்குபவனே!  ஆடும் மயில்போன்ற வள்ளிக்கு இனியவனே!  உன்னை நாடி வழிபடுகின்ற அடியாரிடத்திலே நான் விருப்பம் கொண்டவனாக இருக்க வேண்டும்.  கூடற்பதியான மதுரையாகிய துவாதசாந்த யோக நிலையில் பெறுகின்ற ஞான வாழ்வை அடியேனுக்குத் தந்தருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com