பகுதி - 726

திருவடியைத் தொழவேண்டும்
பகுதி - 726

திருவடியைத் தொழவேண்டும் என்று கோருகின்ற இப்பாடல் திருத்தணிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் உள்ளன.


தனத்தன தானந் தனத்தன தானந்
      தனத்தன தானந் தனதான

எனக்கென யாவும் படைத்திட நாளும்
         இளைப்பொடு காலந் தனிலோயா

எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
         இலச்சையி லாதென் பவமாற

உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
         உரைத்திடு வார்தங் குளிமேவி

உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
         பொலச்சர ணானுந் தொழுவேனோ

வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
         விழக்கொடு வேள்கொன் றவனீயே

விளப்பென மேலென் றிடக்கய னாரும்
         விருப்புற வேதம் புகல்வோனே

சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
         சிரத்தினை மாறும் முருகோனே

தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
         திருத்தணி மேவும் பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com