பகுதி - 478

இந்தத் திருப்புகழ் காசித் தலத்துக்கானது

‘ஞானமாகிய உபதேசத்தை அடையுமாறு அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டுகிற இந்தத் திருப்புகழ் காசித் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்று நீக்கி 34 எழுத்துகளை உடைய பாடல்; ஒவ்வொரு முதல், மூன்றாம், நான்காம் சீரும் நெடிலெழுத்தில் தொடங்குகிறது.  ஒவ்வொரு இரண்டாம் சீரின் இரண்டாம் எழுத்தும் வல்லொற்றாகப் பயில்கிறது.

தான தத்தன தான தானன
      தான தத்தன தான தானன
      தான தத்தன தான தானன  -      தனதான

தார ணிக்கதி பாவி யாய்வெகு
         சூது மெத்திய மூட னாய்மன
         சாத னைக்கள வாணி யாயிறு -  மதிமோக
      தாப மிக்குள வீண னாய்பொரு
         வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
         தாமு யச்செயு மேது தேடிய   -  நினைவாகிப்
பூர ணச்சிவ ஞான காவிய
         மோது தற்புணர் வான நேயர்கள்
         பூசு மெய்த்திரு நீறி டாஇரு   -   வினையேனைப்
      பூசி மெய்ப்பத மான சேவடி
         காண வைத்தருள் ஞான மாகிய
         போத கத்தினை யேயு மாறருள் - புரிவாயே
வார ணத்தினை யேக ராவுமு
         னேவ ளைத்திடு போது மேவிய
         மாய வற்கித மாக வீறிய   -   மருகோனே
      வாழு முப்புற வீற தானது
         நீறெ ழப்புகை யாக வேசெய்த
         மாம திப்பிறை வேணி யாரருள் - புதல்வோனே
கார ணக்குறி யான நீதிய
         ரான வர்க்குமு னாக வேநெறி
         காவி யச்சிவ நூலை யோதிய - கதிர்வேலா
      கான கக்குற மாதை மேவிய
         ஞான சொற்கும ராப ராபர
         காசி யிற்பிர தாப மாயுறை  -  பெருமாளே.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com