பகுதி - 458

இப்பாடல் பழநித் தலத்துக்கானது.

ஆதரவற்ற நிலையில் தனித்திருக்கும் உன் திருவடிகளைத் தந்து ஆதரித்து அருள வேண்டும் என்று கோரும் இப்பாடல் பழநித் தலத்துக்கானது. 

அமைப்பு முறையில் அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்; தொங்கல் சீர் ஒன்று நீங்கலாக மற்ற எல்லாச் சீர்களும் குறில்.  நெடில் பயிலவில்லை. 

தனன தனன தனன தனன
     தனன தனன                        தனதான

தமரு மமரு மனையு மினிய 
         தனமு மரசும்                    அயலாகத்
      தறுகண் மறலி முறுகு கயிறு 
         தலையை வளைய               எறியாதே
கமல விமல மரக தமணி 
         கனக மருவு                     மிருபாதங் 
      கருத அருளி யெனது தனிமை 
         கழிய அறிவு                     தரவேணும் 
குமர சமர முருக பரம 
         குலவு பழநி                      மலையோனே 
      கொடிய பகடு முடிய முடுகு 
         குறவர் சிறுமி                    மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு 
         மழிய அமர்செய்                 தருள்வோனே 
      அறமு நிறமு மயிலு மயிலு 
         மழகு முடைய                   பெருமாளே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com