பகுதி - 606 

பகுதி - 606 

இறைவனைத் துதிப்பதால் வரும் பேற்றை

“வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்”

என்றார் தாயுமானவர்.  ‘மனிதனால் உலோகங்களை வேதித்துப் பொன்னாக மாற்றும் ரசவாதத்தைக்கூடச் செய்யமுடியும்; மனத்தை அடக்கிச் சும்மா இருக்கின்ற திறந்தான் அரிது’ என்று பொருள்.  ‘அவ்வாறு ரசவாதம் செய்வதால் என்ன பயன்?  ஒன்பது உலேகாங்களும் கடைசியில் அதில் கரியாகத்தான் மாறும்’ என்று கேட்கும் இந்தப் பாடல் பழனித் தலத்துக்குரியது.  இறைவனைத் துதிப்பதால் வரும் பேற்றைச் சொல்கிறது.

அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  தொங்கல் சீரை ஒழித்து மற்ற அனைத்துச் சீர்களிலும் மூன்று மூன்று எழுத்துகள்; ஒவ்வொரு மூன்றாம் எழுத்தும் நெடிலாக அமைந்துள்ளது.


தனனா தனனா   தனதான

      தனனா தனனா   தனதான

வரதா மணிநீ   யெனவோரில்

      வருகா தெதுதா  னதில்வாரா

திரதா திகளால்  நவலோக

      மிடவே கரியா மிதிலேது

சரதா மறையோ தயன்மாலும்

     சகலா கமநூ லறியாத

பரதே வதையாள்  தருசேயே

     பழனா புரிவாழ்  பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com