பகுதி - 592

சௌபாக்கியங்களைக் கோருகிறது.

பழநிக்கான இந்தத் திருப்புகழ் இகபர சௌபாக்கியங்களைக் கோருகிறது.

அடிக்கு ஆறே சீருள்ள மிகச் சிறிய அமைப்பு.  ஒவ்வோரடியிலும் ஒற்றொழித்து 22 எழுத்துகள் உள்ளன. ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகள்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு வல்லொற்று, ஒரு குறில் என இரண்டெழுத்துகள் (ஒற்று கணக்கில் சேராது); இவற்றைத் தொடரும் தொங்கல் சீரில் எப்போதும்போல ஐந்தெழுத்துகள்.

தனதனன தாத்த                          தனதானா

வசனமிக வேற்றி                         மறவாதே
      மனதுதுய ராற்றி                    லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ                      ரமதாலே
      இகபரசெள பாக்ய                   மருள்வாயே
பசுபதிசி வாக்ய                           முணர்வோனே
      பழநிமலைவீற்ற                    ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி                       மிகவாழ
      அமரர் சிறை மீட்ட                  பெருமாளே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com