பகுதி - 508

இந்தப் பாடல் கருவூர் தலத்துக்கானது. 

உலக வாழ்க்கைக்கான செல்வத்தையோ மற்ற வசதிகளையோ கோராத குருநாதர், ‘உயர் வாழ்வை அடையும்படியாக இனிதே ஆளவேண்டும்’ என்று வேண்டிக்கொள்ளும் இந்தப் பாடல் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள கருவூர் தலத்துக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல்; ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் ஒற்றொழித்து இரண்டெழுத்துகளைக் கொண்டவை; கணக்கில் சேராத இரண்டாம், நான்காம் எழுத்துகள் வல்லொற்று; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் நான்கு நான்கு எழுத்துகளைக் கொண்டவை—இவற்றின் முடிவில் ஒருசில இடங்களில் காணப்படும் இடையின மெய்களைவிட்டால் வேறு எந்தவகையான ஒற்றெழுத்தும் இடையிலோ முடிவிலோ வருவதைக் காணமுடியாது; மூன்று, நான்கு, ஏழு, எட்டு, பதினொன்று பன்னிரண்டு ஆகிய சீர்கள் நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளைக் கொண்டவை.  சந்தப் பின்னல்.

தத்தத் தனதன தானன தானன
      தத்தத் தனதன தானன தானன
      தத்தத் தனதன தானன தானன            தனதான

நித்தப் பிணிகொடு மேவிய காயமி
         தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
         நிற்பொற் ககனமொ டாமிவை பூதக     லவைமேவி
      நிற்கப் படுமுல காளவு மாகரி
         டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
         நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு   மடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
         வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
         டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி  லுழல்வேனை 
      எத்திற் கொடுநின தாரடி யாரொடு
         முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
         திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற     இனிதாள்வாய்
தத்தத் தனதன தானன தானன
         தித்தித் திமிதிமி தீதக தோதக
         டத்தக் குடகுகு தாகுட தீகுட            வெனபேரிச்
      சத்தத் தொலிதிகை தாவிட வானவர்
         திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட
         சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை       யெறிவோனே
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
         சத்திக் கிடமருள் தாதகி வேணியர்
         வெற்புப் புரமது நீறெழ காணிய         ரருள்பாலா
      வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி
         சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள
         வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய   பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com