பகுதி - 680

போற்றிப் பாடுவதற்கான சொற்களைத் தந்தருளவேண்டும்
பகுதி - 680

‘உன் திருவடிகளைப் போற்றிப் பாடுவதற்கான சொற்களைத் தந்தருளவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.  ‘முத்தா முத்தி அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே’ என்று ஒரே மகுடத்தோடு முடிவடையும் பதினோரு பாடல்களில் இது பத்தாவது பாடல்.

அமைப்பு முறையில் அவற்றைப் போலவே இதுவும் அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டது; ஒவ்வொரு சீரிலும் இரண்டாமெழுத்து வல்லொற்று; மூன்றாமெழுத்து நெடில்.  ஒவ்வொரு ஆறாம் சீரிலும் இரண்டு, நான்கு ஆகிய இரண்டெழுத்துகளும் வல்லொற்று.

தத்தா தத்தா தத்தா தத்தா
      தத்தா தத்தத்                       தனதான

மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே
         வித்தா ரத்திற்                   பலகாலும்

வெட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே
         வித்தா சைச்சொற்               களையோதிக்

கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா
         ரைப்போ லக்கற்                 பழியாதுன்

கற்பூ டுற்றே நற்றா ளைப்பா
         டற்கே நற்சொற்                  றருவாயே

பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய்
         முற்பால் வெற்பிற்               புனமானைப்

பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பா
         தத்தாள் பற்றிப்                  புகல்வோனே

முக்கோ ணத்தா னத்தா ளைப்பால்
         வைத்தார் முத்தச்                சிறியோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
         முத்தா முத்திப்                  பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com