பகுதி - 690

சரியை, கிரியை நெறி பற்றி நிற்க
பகுதி - 690

சரியை, கிரியை நெறி பற்றி நிற்க வேண்டுகின்ற இந்தப் பாடல் திருப்புத்தூர் தலத்துக்கானது.  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரின் பாடல்பெற்ற தலமான இது குன்றக்குடிக்கும் காரைக்குடிக்கும் அருகில் உள்ளது.

அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் (கணக்கில் சேராத) இரண்டு வல்லொற்றுகளையும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் ஒரு நெடில், ஒரு குறில் என இரண்டெழுத்துகளையும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்கள் நான்கு குற்றெழுத்துகளையும் கொண்டு அமைந்திருக்கின்றன.

தனத்தத் தான தனன தனதன
      தனத்தத் தான தனன தனதன
      தனத்தத் தான தனன தனதன தனதான

கருப்புச் சாப னனைய இளைஞர்கள்
         ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய
         கடைக்கட் பார்வை யினிய வனிதையர்
          தனபாரங்

களிற்றுக் கோடு கலச மலிநவ
         மணிச்செப் போடை வனச நறுமலர்
         கனத்துப் பாளை முறிய வருநிக ரிளநீர்போற்

பொருப்பைச் சாடும் வலியை யுடையன
         அறச்சற் றான இடையை நலிவன
         புதுக்கச் சார வடமொ டடர்வன எனநாளும்

புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர்
         ப்ரியப்பட் டாள வுரைசெ யிழிதொழில்
         பொகட்டெப் போது சரியை கிரியைசெய்
         துயிர்வாழ்வேன்

இருட்டுப் பாரில் மறலி தனதுடல்
         பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழ
         எயிற்றுப் போவி யமர ருடலவர் தலைமாலை

எலுப்புக் கோவை யணியு மவர்மிக
         அதிர்த்துக் காளி வெருவ நொடியினில்
         எதிர்த்திட் டாடும் வயிர பயிரவர் நவநீத

திருட்டுப் பாணி யிடப முதுகிடை
         சமுக்கிட் டேறி யதிர வருபவர்
         செலுத்துப் பூத மலகை யிலகிய

         படையாளி

செடைக்குட் பூளை மதிய மிதழிவெ
         ளெருக்கச் சூடி குமர வயலியல்
         திருப்புத் தூரில் மருவி யுறைதரு
         பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com