பகுதி - 696

உன்னுடைய அருளைத் தரவேண்டும்
பகுதி - 696

‘ஆவி நைந்து மங்காமல் உன்னுடைய அருளைத் தரவேண்டும் என்று கோரும் இப்பாடல் திருச்செங்கோட்டுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல். மெல்லொற்றுகளால் நிறைந்த இப்பாடலில் ஒருசில இடையின ஒற்றுகளும் பயில்கின்றன.  வல்லொற்று எதுவும் இல்லை.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் குறில்-நெடில்-குறில் என மூன்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் பயில்கின்றன.


தந்தான தந்த தந்தான தந்த
      தந்தான தந்த                       தனதான

பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
         பைந்தார் புனைந்த               குழல்மீதே        

பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
         பங்கே ருகங்கொள்               முகமீதே

மந்தார மன்றல் சந்தார மொன்றி
         வன்பாத கஞ்செய்                தனமீதே        

மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து 
         மங்காம லுன்ற                  னருள்தாராய்        

கந்தா அரன்றன் மைந்தா விளங்கு  
         கன்றா முகுந்தன்                மருகோனே

கன்றா விலங்க லொன்றாறு கண்ட
         கண்டா வரம்பை                 மணவாளா         

செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
        திண்டோள் நிரம்ப                அணிவோனே        

திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு   
         செங்கோட மர்ந்த                பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com