பகுதி - 698

பகுதி - 698

உன்னுடைய திருவடியை மறவாதிருக்க வேண்டும்

‘உன்னுடைய திருவடியை மறவாதிருக்க வேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருச்செங்கோட்டுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல். மெல்லொற்றுகளால் நிறைந்த இப்பாடலில் ஒருசில இடையின ஒற்றுகளும் பயில்கின்றன.  வல்லொற்று எதுவும் இல்லை.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் குறில்-நெடில்-குறில் என மூன்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் பயில்கின்றன.


தந்தான தந்த தந்தான தந்த
      தந்தான தந்த தனதான

வண்டார் மதங்க ளுண்டே மயங்கி
         வந்தூரு கொண்ட லதனோடும்

வண்காம னம்பு தன்கால் மடங்க
         வன்போர் மலைந்த விழிவேலும்

கொண்டேவ ளைந்து கண்டார் தியங்க
         நின்றார் குரும்பை               முலைமேவிக்

கொந்தா ரரும்பு நின்தாள் மறந்து
         குன்றாம லுன்ற  னருள்தாராய்

பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
         பண்போனு கந்த மருகோனே

பண்சார நைந்து நண்போது மன்பர்
         பங்காகி நின்ற குமரேசா

செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்
         நின்றாடி சிந்தை மகிழ்வாழ்வே

செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற
         செங்கோட மர்ந்த பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com