பகுதி - 666

பிறப்பும் இறப்புமாகச் சுழல்கின்ற பிறவிப் பிணி
பகுதி - 666

பிறப்பும் இறப்புமாகச் சுழல்கின்ற பிறவிப் பிணி போய்த் தொலைய வேண்டுகின்ற இந்தத் திருப்புகழ் திருவண்ணாமலைக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளை உடைய பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்குகின்ற நான்கெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்குகின்ற இரண்டெழுத்துகளையும் கணக்கில் சேராத ஒரு வல்லொற்றையும் கொண்டவை.

தானதன தானத் தானதன தானத்
      தானதன தானத் தனதான

பேதகவி ரோதத் தோதகவி நோதப்
         பேதையர்கு லாவைக் கண்டுமாலின்

பேதைமையு றாமற் றேதமக லாமற்
         பேதவுடல் பேணித் தென்படாதே

சாதகவி காரச் சாதலவை போகத்
         தாழ்விலுயி ராகச் சிந்தையாலுன்

தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்
         சாரல்மற மானைச் சிந்தியேனோ

போதகம யூரப் போதகக டாமற்
         போதருணை வீதிக் கந்தவேளே

போதகக லாபக் கோதைமுது வானிற்
         போனசிறை மீளச் சென்றவேலா

பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்
         பாருலகு வாழக் கண்டகோவே

பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
         பாடுமவர் தோழத் தம்பிரானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com