பகுதி - 678

திருவடியை அணுகக் கோரும்

திருவடியை அணுகக் கோரும் இந்தப் பாடல் பொதுப் பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.  ‘முத்தா முத்தி அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே’ என்று ஒரே மகுடத்தோடு முடிவடையும் பதினோரு பாடல்களில் இதுவரையில் எட்டு பாடல்களைப் பார்த்திருக்கறோம்.  இது ஒன்பதாவது பாடல்.

அமைப்பு முறையில் அவற்றைப் போலவே இதுவும் அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டது; ஒவ்வொரு சீரிலும் இரண்டாமெழுத்து வல்லொற்று; மூன்றாமெழுத்து நெடில்.  ஒவ்வொரு ஆறாம் சீரிலும் இரண்டு, நான்கு ஆகிய இரண்டெழுத்துகளும் வல்லொற்று.


தத்தா தத்தா தத்தா தத்தா
      தத்தா தத்தத்                       தனதான

பட்டா டைக்கே பச்சோ லைக்கா
         துக்கே பத்தித்                    தனமாகும்        

பக்கே நிட்டூ ரப்பார் வைக்கே 
         பட்டா சைப்பட்                   டுறவாடி       

ஒட்டார் நட்டார் வட்டா ரத்தே
         சுற்றே முற்றத்                   தடுமாறும்     

ஒட்டா ரப்பா விக்கே மிக்கா
         முற்றாள் கிட்டத்                 தகுமோதான்     

கட்டா விப்போ துட்டா விப்பூ
         கக்கா விற்புக்                    களிபாடுங்       

கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய்
         கத்தா சத்தித்                    தகவோடே     

முட்டா கக்கூ ரிட்டே னற்றாள்
         முற்றா மற்கொட்                குமரேசா     

முத்தா முத்தீ யத்தா சுத்தா 
         முத்தா முத்திப்                  பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com