பகுதி - 650

பொதுப்பெண்டிருடைய உறவிலிருந்து
பகுதி - 650


பொதுப்பெண்டிருடைய உறவிலிருந்து விடுபடக் கோரும் இந்தப் பாடல் திருவண்ணாமலைக்கானது.  இதற்காக உள்ள வலிமையைச் சுட்டுவதைப்போல் பாடல் முழுவதும் வல்லொற்றுக்களால் அமைந்துள்ளது.

அடிக்கு ஒற்றொழித்து 43 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஆறு, பதினொன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டு, பதிநான்கு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும், இரண்டு வல்லொற்றுகளும்; மூன்று, எட்டு, பதின்மூன்று ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு வல்லொற்றும்; ஐந்து, பத்து, பதினைந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன. 


தனன தத்தத் தத்த தத்தத் தனதன
         தனன தத்தத் தத்த தத்தத் தனதன
         தனன தத்தத் தத்த தத்தத் தனதன தனதான

கமல மொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை
          நிலைகு லைத்துப் பொற்கு டத்தைத் தமனிய
          கலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற இளநீரைக்

கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதப
         சயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவிய
         கரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத னபிஷேகம்

அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்து
         அதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையி
         னடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொ டிருதாளம்

அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவிய
         சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு
         மபிந வச்சித் ரத்த னத்துத் திருடிக ளுறவாமோ

தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை
       தொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு
       தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட எனவோதிச்

சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ
       விழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள்
       தசைகள் பட்சித் துக்க ளித்துக் கழுதொடு கழுகாட

அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள
       அசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியென
       அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு மயிலோனே

அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி
        னுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபர
        அருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள் பெருமாளே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com