பகுதி - 766

கனவிலும் நனவிலும் மறவேன்
பகுதி - 766


‘உன்னுடைய திருவடியைக் கனவிலும் நனவிலும் மறவேன்’ என்று உருகும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 49 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும், மற்ற எல்லாச் சீர்களிலும் நான்கு குற்றெழுத்துகளும் கொண்டது.

தனன தனதன தனதன தனதன
                தனன தனதன தனதன தனதன
                தனன தனதன தனதன தனதன தனதான

குமர குருபர குணதர நிசிசர

                        திமிர தினகர சரவண பவகிரி
                        குமரி சுதபகி ரதிசுத சுரபதி குலமானுங்

குறவர் சிறுமியு மருவிய திரள்புய
                        முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
                        கொடிய வினையனை யவலனை யசடனை யதிமோகக்

கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
                        களவி னொடுபொரு ளளவள வருளிய
                        கலவி யளறிடை துவளுறும் வெளிறனை யினிதாளக்

கருணை யடியரொ டருணையி லொருவிசை
                        சுருதி புடைதர வருமிரு பரிபுர
                        கமல மலரடி கனவிலு நனவிலு மறவேனே

தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
                        மறுகி யலைபட விடநதி யுமிழ்வன
                        சமுக முககண பணபணி பதிநெடு வடமாகச்

சகல வுலகமு நிலைபெற நிறுவிய
                        கனக கிரிதிரி தரவெகு கரமலர்
                        தளர வினியதொ ரமுதினை யொருதனி கடையாநின்

றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
                        அகில புவனமு மளவிடு குறியவன்
                        அளவு நெடியவ னளவிட அரியவன் மருகோனே

அரவு புனைதரு புநிதரும் வழிபட
                        மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
                        அறிவை யறிவது பொருளென அருளிய பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com