பகுதி - 768

அடியேனுடைய வினைகளை அழித்தருள
பகுதி - 768

‘உன்னுடைய திருவடிகளைத் தந்து அடியேனுடைய வினைகளை அழித்தருள வேண்டும்’ என்று வேண்டுகிற இப்பாடல் காஞ்சீபுரத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.


தனன தத்தன தனன தத்தன 
                தனன தத்தன தனதான 

படிறொ ழுக்கமு மடம னத்துள
                        படிப ரித்துட னொடிபேசும் 

பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள் 
                        பலகொ டுத்தற உயிர்வாடா 

மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
                        விதன முற்றிட மிகவாழும் 

விரகு கெட்டரு நரகு விட்டிரு 
                        வினைய றப்பத மருள்வாயே 

கொடியி டைக்குற வடிவி யைப்புணர் 
                        குமர கச்சியி லமர்மார்பா 

குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
                        குவளை முற்றணி திருமார்பா 

பொடின டப்பட நெடிய விற்கொடு 
                        புரமெ ரித்தவர் குருநாதா 

பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
                        பொருது ழக்கிய பெருமாளே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com