பகுதி - 728

தலைவியின் தாய்

நற்றாயிரங்கல் துறையில் முருகனின்மேல் காதல் கொண்ட தலைவியின் தாய் முருகனைப் பார்த்துப் பாடுவதாக அமைந்த இப்பாடல் காமத்தூர் என்னும் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  எல்லாச் சீர்களிலும் ஒரு நெடில், ஒரு குறில் ஒரு வல்லொற்று ஒவ்வொரு சீரிலும் இரண்டு இரண்டு எழுத்துகளாக அமைந்திருக்கிறது.


தானத் தானத் தானத் தானத்
      தானத் தானத்                       தனதானா

ஆகத் தேதப் பாமற் சேரிக்
         கார்கைத் தேறற்                 கணையாலே

ஆலப் பாலைப் போலக் கோலத்
         தாயக் காயப்                     பிறையாலே

போகத் தேசற் றேதற் பாயற்
         பூவிற் றீயிற்                     கருகாதே

போதக் காதற் போகத் தாளைப்
         பூரித் தாரப்                      புணராயே

தோகைக் கேயுற் றேறித் தோயச்
         சூர்கெட் டோடப்                  பொரும்வேலா

சோதிக் காலைப் போதக் கூவத்
         தூவற் சேவற்                    கொடியோனே

பாகொத் தேசொற் பாகத் தாளைப்
         பாரித் தார்நற்                    குமரேசா

பாரிற் காமத் தூரிற் சீலப்
         பாலத் தேவப்                    பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com