பகுதி - 730

வாழ்நாள் வீணே கழியாமல்
பகுதி - 730

‘என் வாழ்நாள் வீணே கழியாமல் என்னை ஆண்டுகொள்ளவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவாரூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட முற்றிலும் நெடிலெழுத்துகளால் ஆன பாடல்.  ஒன்று முதல் ஐந்தாவது சீர்வரையில் இரண்டிரண்டு எழுத்துகள்; இரண்டும் நெடில்.  ஆறாவது சீரில் மட்டும் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகள் என்று அமைந்திருக்கிறது.

தானா தானா தானா தானா
      தானா தானத்                       தனதான

கூசா தேபா ரேசா தேமால்
         கூறா நூல்கற்                    றுளம்வேறு

கோடா தேவேல் பாடா தேமால்
         கூர்கூ தாளத்                    தொடைதோளில்

வீசா தேபேர் பேசா தேசீர்
         வேதா தீதக்                      கழல்மீதே

வீழா தேபோய் நாயேன் வாணாள்
         வீணே போகத்                   தகுமோதான்

நேசா வானோ ரீசா வாமா
         நீபா கானப்                       புனமானை

நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்
         நீள்கார் சூழ்கற்                   பகசாலத்

தேசா தீனா தீனா ரீசா
         சீரா ரூரிற்                       பெருவாழ்வே

சேயே வேளே பூவே கோவே
         தேவே தேவப்                    பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com