பகுதி - 732

இகழ்ச்சிக்கிடமாய்க் கிடக்கலாமா
பகுதி - 732

‘நான் இகழ்ச்சிக்கிடமாய்க் கிடக்கலாமா’ என்று கேட்டு இகழ்ச்சியை நீக்கக் கோரும் இப்பாடல் திருவாரூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட முற்றிலும் நெடிலெழுத்துகளால் ஆன பாடல்.  ஒன்று முதல் ஐந்தாவது சீர்வரையில் இரண்டிரண்டு எழுத்துகள்; இரண்டும் நெடில்.  ஆறாவது சீரில் மட்டும் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகள் என்று அமைந்திருக்கிறது.  பாடல் முழுவதிலும் இந்த ஆறாவது சீரில் மட்டும்தான் குற்றெழுத்து இடம்பெற்றிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.


தானா தானா தானா தானா
      தானா தானத்                       தனதான

பாலோ தேனோ பாகோ வானோர்
         பாரா வாரத்                      தமுதேயோ

பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
         பானோ வான்முத்                தெனநீளத்

தாலோ தாலே லோபா டாதே
         தாய்மார் நேசத்                  துனுசாரந்

தாரா தேபே ரீயா தேபே
         சாதே யேசத்                     தகுமோதான்

ஆலோல் கேளா மேலோர் நாண்மா
         லானா தேனற்                   புனமேபோய்

ஆயாள் தாள்மேல் வீழா வாழா
         ஆளா வேளைப்                  புகுவோனே

சேலோ டேசே ராரால் சாலார்
         சீரா ரூரிற்                       பெருவாழ்வே

சேயே வேளே பூவே கோவே
         தேவே தேவப்                    பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com