பகுதி - 737

பிரம்மனுடைய மைத்துனனே!
பகுதி - 737

பதச் சேதம்

சொற் பொருள்

நீ தான் எத்தனையாலும்

எத்தனையாலும்: எல்லா வகையிலும்;

நீடூழி க்ருபையாகி 

 

 

மா  தான தனமாக

 

மா ஞான கழல் தாராய்

 

வேதா மைத்துன வேளே

வேதா: பிரமன்; வேதா மைத்துன: (பிரமன் திருமாலின் மகன் என்பதால்) பிரமனை மாமன் மகனாக உடைய;

வீரா சற்குண சீலா

 

 

ஆதாரத்து ஒளியானே

 

ஆரூரில் பெருமாளே.

 

 

நீதானெத் தனையாலும் நீடூழிக் க்ருபையாகி... நீயே எல்லா வகையிலும் நீடுழிக் காலத்துக்கும் கிருபை நிறைந்தவனாகி,

மாதானத் தனமாக மாஞானக் கழல்தாராய்... ஞான சொரூபமாகிய உன்னுடைய திருவடிகளை எனக்கு தானப்பொருளாகத் தரவேண்டும்.

வேதாமைத்துனவேளே வீரா சற்குணசீலா... பிரம்மனுடைய மைத்துனனே! வேளே! சற்குணங்கள் நிறைந்த சீலனே!

ஆதாரத்து ஒளியானே ஆரூரிற் பெருமாளே..... (மூலாதாரம் முதலான) ஆறு ஆதாரங்களிலும் ஒளியாக விளங்குபவனே! திருவாரூரில் வீற்றிருக்கும் பெருமாளே!


சுருக்க உரை:

பிரமனை மாமன் மகனாக உடையவனே! வேளே! சற்குண சீலனே! ஆறு ஆதாரங்களிலும் பிரகாசிப்பவனே! திருவாரூரில் வீற்றிருக்கும் பெருமாளே!

நீயே எல்லா வகையாலும் என்மீது நீடுழிக் காலத்துக்கும் கிருபை கொண்டவனாகி, சிறந்த தானப் பொருளாக ஞான ஸ்வரூபமாகிய உன்னுடைய திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com