பகுதி - 746

பகுதி - 746

என்னிடத்திலுள்ள தீமைகள் அறுவதற்கு

‘என்னிடத்திலுள்ள தீமைகள் அறுவதற்கு, ‘அஞ்சேல்’ என்று அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருச்செங்கோட்டுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  எல்லாச் சீர்களிலும் ஒன்றேபோல மூன்று மூன்று எழுத்துகளே அமைந்திருந்தாலும் இவை அமைப்பில் மாறுபட்டவை.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் ஒரு மெல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.


தனத்தந் தானன தனத்தந் தானன
      தனத்தந் தானன                    தனதான

கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
         கருப்பஞ் சாறெனு                மொழியாலே

கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
         கடைக்கண் பார்வையி            லழியாதே

விலக்கும் போதக மெனக்கென் றேபெற
         விருப்பஞ் சாலவு                 முடையேனான்

வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
         விடற்கஞ் சேலென               அருள்வாயே

அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
         அறுக்குங் கூரிய                 வடிவேலா

அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
         யடுக்கும் போதக                 முடையோராம்

சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
         திருச்செங் கோபுர                வயலூரா

திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
         திருச்செங் கோடுறை             பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com