பகுதி - 771

பகுதி - 771
பகுதி - 771

பதச் சேதம்

சொற் பொருள்

சிரத்தானத்தில்பணியாதே

 

சிரத்தானத்தில்: சிர ஸ்தானத்தில்—தலையைக் கொண்டு;

செகத்தோர் பற்றைகுறியாதே

 

குறியாதே: கவனம் செலுத்தாமல்;

வருத்தா மற்றுஒப்பிலதான

 

வருத்தா: வருத்தி—ஏற்றுக்கொண்டு;

மலர் தாள் வைத்துஎத்தனை ஆள்வாய்

 

எத்தனை: எத்தனாகிய (ஏமாற்றுக்காரனாகிய) என்னை

நிருத்தா கர்த்தத்துவநேசா

 

நிருத்தா: நிருத்தம் ஆடுபவனே; கர்த்தத்துவ: தலைமைத்தானத்தை, கடவுள் தன்மையை உடைய;

நினைத்தார் சித்தத்துஉறைவோனே

 

 

திரு தாள் முத்தர்க்குஅருள்வோனே

 

முத்தர்க்கு: முற்றத் துறந்தவர்கள், ஜீவன் முக்தர்கள்;

திரு காளத்திபெருமாளே.

 

 

சிரத்தா னத்திற் பணியாதே... தலையால் உன்னை வணங்காமல் இருக்கின்ற நான்,

செகத்தோர் பற்றைக் குறியாதே... உலகில் உள்ளவர்களுடைய பந்த பாசங்களில் கவனம் செலுத்தாமல்;

வருத்தா மற்றொப்பிலதான... (நீ) என்னை வருத்தி (ஏற்றுக்கொண்டு), ஒப்பிலாததான (உன்னுடைய)

மலர்த்தாள் வைத்து எத்தனை ஆள்வாய்... உன்னுடைய மலர்ப்பாதங்களில் என்னை வைத்துக்கொண்டு, ஏமாற்றுக்காரனாகிய என்னை ஆண்டருள வேண்டும்.

நிருத்தா கர்த்தததுவ நேசா... நடனம் புரிபவனே! இறைத்தன்மையை உடையவனே! நண்பனே!

நினைத்தார் சித்தத்து உறைவோனே... உன்னையே நினைத்திருப்பவர்களுடைய உள்ளத்தில் குடியிருப்பவனே!

திருத்தாள் முத்தர்க்கு அருள்வோனே... ஜீவன் முக்கதர்களுக்கு* உன்னுடைய திருப்பாதங்களைத் தந்தருள்பவனே!

(* ஜீவன் முக்தர்கள் நான்கு வகையினர்.  (1) பிரம வித்துகள்: பிரமஞானம் அடைந்தபோதிலும் உலகத்துக்கு உதவும்விதமாகத் தமக்கு விதிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றுபவர்கள்; (2) பிரமரவர்: சமாதி நிலையை அடைந்து அதிலிருந்து தாமே விழித்தெழுபவர்கள்; (3) பிரம வரியர்: சமாதி நிலையை அடைந்து அதிலிருந்து பிறர் கலைக்க விழித்தெழுபவர்கள்; (4) பிரம வரிஷ்டர்: சமாதி நிலையை அடைந்து அதிலிருந்து தானேயோ அல்லது பிறர் கலைத்தோ எழாமலிருப்பவர்கள்.)

திருக்கா ளத்திப் பெருமாளே....திருக்காளத்தியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

நிருத்தமிடுபவனே! கடவுள் ஸ்தானம் வகிக்கின்ற நண்பனே! உன்னையே நினைத்திருப்பவர்களுடைய உள்ளத்தில் குடியிருப்பவனே! முற்றும் துறந்த ஜீவன் முக்தர்களுக்கு திருப்பாதங்களைத் தந்தருள்பவனே!  திருக்காளத்தியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

தலையைக்கொண்ட உன்னைப் பணியாத என்னை உலகத்தோர்களுடைய பந்தபாசங்களில் கவனம் செலுத்தாதபடி வருத்தி ஏற்றுக்கொண்டு ஒப்பில்லாத உன்னுடைய மலர்போன்ற திருவடிகளில் சேர்த்துக்கொண்டு வஞ்சகனாகிய என்னை ஆண்டருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com