பகுதி - 772

அடிக்கு ஒற்றொழித்து
பகுதி - 772

‘உன்னுடைய கழலைத் தொழும் இயல்பைத் தந்தருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணா மலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களின் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் அமைந்துள்ளன.

தனதன தனனந் தனதன தனனந் தனதன
                                                   தனனந் தனதான

விரகொடு வளைசங் கடமது தருவெம் பிணிகொடு
                                                    விழிவெங்  கனல்போல

வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின் றெனவிதி
                                                    வழிவந் திடுபோதிற்

கரவட மதுபொங் கிடுமன மொடுமங் கையருற
                                                    வினர்கண் புனல்பாயுங்

கலகமும் வருமுன் குலவினை களையுங் கழல்தொழு
                                                     மியல்தந் தருள்வாயே

பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும் படவர
                                                      வணைகண் டுயில்மாலம்

பழமறை மொழிபங் கயனிமை யவர்தம் பயமற
                                                      விடமுண்டெருதேறி

அரவொடு மதியம் பொறிசடை மிசைகங் கையுமுற
                                                       அனலங் கையில்மேவ

அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங் கருணையில்
                                                        மருவும் பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com