பகுதி - 776

அநுபூதி நிலையைத்
பகுதி - 776

‘அநுபூதி நிலையைத் தரவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திரிசிராப்பள்ளிக்கு உரியது.  எனினும் பாடலின் ஈற்றடியில் ‘சக சிரகிரிப் பதிவேளே’ என்று குறிப்பிடப்படுவதால், சிரம்=சென்னி என்றுகொண்டு ‘சிரகிரி’ என்பது சென்னிமலையைக் குறிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட மிகச்சிறிய பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஆறு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டாம் சீரான தொங்கல் சீரில் எப்போதும்போல மூன்றாம் எழுத்து நெடிலாக அமையும் நான்கெழுத்துகள் அமைந்துள்ளன.

தனதனதனத்   தனதான
பகலிரவினிற்  றடுமாறா
      பதிகுருவெனத்   தெளிபோத
ரகசியமுரைத்  தனுபூதி
      ரதநிலைதனைத் தருவாயே
இகபரமதற்     கிறையோனே
      இயலிசையின்முத்  தமிழோனே
சகசிரகிரிப்     பதிவேளே
      சரவ ணபவப்    பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com