பகுதி - 782

நான் மோகவசப்படுதல் ஒழியவேண்டும்
பகுதி - 782


‘நான் மோகவசப்படுதல் ஒழியவேண்டும்’ என்று வேண்டுகிற இப்பாடல் திருசிராப்பள்ளிக்கு உரியது.  பாடலின் மூன்றாம், நான்காம் அடிகள் இரண்டிலும் குருநாதர் அம்பிகையின் பல பெயர்களை அடுக்குகிறார்.  முருகனடிமையாகிய அவர் நாராயணனிடத்திலும், நாராயணனிடத்திலும் பரவசப்படுவதிலும் பரமசிவன் என்றால் மனமுருகுவதிலும் வியப்பில்லை.

அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாய் மூன்றெழுத்துகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் அமைந்துள்ளன.

தனன தானன தத்தன தந்தன

      தனன தானன தத்தன தந்தன

      தனன தானன தத்தன தந்தன             தனதான
 

குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்

         கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர்

         குமுத வாயமு தத்தை நுகர்ந்திசை     பொருகாடை

         குயில்பு றாமயில் குக்கில் சுரும்பனம்

         வனப தாயுத மொக்கு மெனும்படி

         குரல்வி டாஇரு பொற்குட மும்புள     கிதமாகப்

பவள ரேகைப டைத்தத ரங்குறி

         யுறவி யாளப டத்தை யணைந்துகை

         பரிச தாடன மெய்க்கர ணங்களின்      மதனூலின்

         படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ

         அவச மாய்வட பத்ர நெடுஞ்சுழி

         படியு மோகச முத்ரமழுந்துத            லொழிவேனோ

தவள ரூபச ரச்சுதி யிந்திரை

         ரதிபுலோமசை க்ருத்திகை ரம்பையர்

         சமுக சேவித துர்க்கை பயங்கரி         புவநேசை

         சகல காரணி சத்தி பரம்பரி

         யிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி

         சமக நாயகி நிஷ்களி குண்டலி         யெமதாயி

சிவைம நோமணி சிற்சுக சுந்தரி

         கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை

         த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள்   முருகோனே

         சிகர கோபுர சித்திர மண்டப

         மகர தோரண ரத்ந அலங்க்ருத

         திரிசிராமலை அப்பர் வணங்கிய        பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com