பகுதி - 786 

‘அடியேனைக் கொடிய நரகத்தில் விழாமல் காக்கவேண்டும்’ 
பகுதி - 786 

‘அடியேனைக் கொடிய நரகத்தில் விழாமல் காக்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு நெடிலுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.


தனனா தனனத் தனனா தனனத்

      தனனா தனனத்                     தனதான


அருமா மதனைப் பிரியா தசரக்

         கயலார் நயனக்                  கொடியார்தம்

        அழகார் புளகப் புழுகார் சயிலத்

         தணையா வலிகெட்              டுடல்தாழ

இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்

         றிளையா வுளமுக்               குயிர்சோர

        எரிவாய் நரகிற் புகுதா தபடிக்

         கிருபா தமெனக்                  கருள்வாயே

ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்

         டுரமோ டெறிபொற்              கதிர்வேலா

         உறைமா னடவிக் குறமா மகளுக்

         குருகா றிருபொற்                புயவீரா

திருமால் கமலப் பிரமா விழியிற்

         றெரியா வரனுக்                 கரியோனே

         செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்

         றிருவீ தியினிற்                  பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com