05.12.1896: சென்னையில் உள்ள கன்னிமாரா பொது நூலகம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட நாள் இன்று!

சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் (Connemara Public Library) இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றாகும்.
05.12.1896: சென்னையில் உள்ள கன்னிமாரா பொது நூலகம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட நாள் இன்று!

சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் (Connemara Public Library) இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு பிரதி பாதுகாக்கப்படும்.

1890-இல் நிறுவப்பட்ட இந்நூலகத்தில் புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும் உள்ளது.

கன்னிமாரா நூலகம் குறித்த வரலாறு 1860-ல் தொடங்குகிறது. அன்றைய ஆங்கில அரசின் மதராஸ் மாகாணத்தில் உள்ள மதராஸ் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக ஒரு சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது.இந்த நூலகத்திற்கு இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் இருந்து தேவைக்கு அதிகமாக உள்ள  நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அனுப்பப்பட்டன.

அருங்காட்சியக நூலக மாதிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராஸ்  மாகாண ஆளுநராக இருந்த லார்டு கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்காக தனியாக பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார்.

கட்டுமான பணிகள் முடிந்து 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் கன்னிமாரா நூலகமானது பொதுமக்கள்  பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதற்காக முன்முயற்சி எடுத்த கன்னிமாரா அவர்களின் பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com